உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 16,698 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ தேங்காய், 33.69 - 61.65 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் கொப்பரை தேங்காய், 329 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 152.99 - 183.79 ரூபாய், இரண்டாம் தரம், 88.99 - 174.79 ரூபாய்க்கும் விலை போனது. எள், 1,314 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் ஒரே விலையாக கிலோ, 156.99 ரூபாய்க்கு விற்பனையானது. சிவப்பு ரகம், 108.99 - 114.99 ரூபாய், மஞ்சள் வெள்ளை ரகம், 104.99 - 121.78 ரூபாய் வரை விற்றது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் மூன்றும் சேர்ந்து, 1 கோடியே, 35 லட்சத்து, 20,632 ரூபாய்க்கு விற்பனையானது.

* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 1,100 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 161.56 - 168.99 ரூபாய், இரண்டாம் தரம், 102.99 - 163.69 ரூபாய் விலையில், 52,147 கிலோ கொப்பரை, 77.15 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

* ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றிரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கலுக்கான சில்லறை மற்றும் மொத்த ஆடை விற்பனை அதிகமாக நடந்தது. அதேநேரம் குளிருக்கான பெட்ஷீட், பெட் ஸ்பிரட், துண்டு, லுங்கி, வேட்டி, காட்டன் நைட்டி உட்பட உள்ளாடைகள் அதிகம் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,200 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-1,120, காக்கடா-1,200, செண்டுமல்லி-70, கோழிக்கொண்டை-55, ஜாதி முல்லை-1,250, கனகாம்பரம்-900, சம்பங்கி-50, அரளி-310, துளசி-50, செவ்வந்தி-100 ரூபாய்க்கும் விற்பனையானது.

* சென்னிமலை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 981 காய் வரத்தானது. ஒரு கிலோ, 46.50 ரூபாய் முதல் 48.20 ரூபாய் வரை, ஏலம் போனது.

Advertisement