காணவில்லை!
நமது சிறப்பு நிருபர்
பாலஸ்தீனர்களுக்காக உரக்க குரல் கொடுத்த இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள், வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, இந்திய பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் கண்டனங்களை பதிவிட்டனர். அப்பாவிகள் கொல்லப்படுவதாக கூறி, இஸ்ரேல் அரசுக்கு எதிராக, கூக்குரல் எழுப்பினர். போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்படி கூப்பாடு போட்டவர்கள் பலர் இப்போது, வங்கதேசத்தில் நடக்கும் வன்முறையில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதை கண்டு வாய் திறக்காமல் உள்ளனர்.
வங்கதேச வன்முறையில் சிறுபான்மை ஹிந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய உடலை, மரத்தில் கட்டி வைத்து தீயிட்டு எரித்தனர்.
அங்குள்ள பத்திரிகை அலுவலகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அன்று பாலஸ்தீனத்துக்காக ஓடோடி வந்து குரல் கொடுத்த இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள், வங்கதேசத்தில் நடக்கும் அட்டூழியத்தை கண்டு வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வாய்திறப்பதில்லை!
இது குறித்து கடும் கேள்விக்கணைகளால் ஆந்திரா துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வெளுத்து வாங்கி உள்ளார். அவர் கூறுகையில், வங்கதேசத்தில் நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. பாலஸ்தீனத்தில் ஏதேனும் நடந்தால் இங்கே இருக்கும் பலர் குதித்து கூப்பாடு போடுகின்றனர். அதுவே வங்கதேசத்தில் நடந்தால் யாரும் வாய் திறப்பதில்லை, என்றார்.
இன்று காணவில்லையே?
அன்று பாலஸ்தீனத்துக்கு குரல் கொடுத்த இந்திய அரசியல்வாதிகள் யார் யார்? அவர்கள் சொன்னது என்ன? என்பது குறித்த ஓர் சிறப்பு அலசல்!
காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியா
காசாவில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு அமைதி காப்பது கோழைத்தனமானது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி உலக அரங்கில் துணிச்சலாக தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் எம்பி, பிரியங்கா
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது.
காங்கிரஸ் எம்பி, ராகுல்
காசாவில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்றதும், உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்து லட்சக்கணக்கான மக்களை ஒட்டுமொத்தமாக தண்டிப்பதும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகும்.
இயக்குநர் வெற்றிமாறன்
பாலஸ்தீனத்தில் நடந்து வருவது இனப்படுகொலை. மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்பது தெரிந்தும் குண்டு வீசி தாக்குகின்றனர். காசாவில் நடக்கும் திட்டமிட்ட இனப்படுகொலையை கண்டிக்க வேண்டியது நமது கடமை.
நடிகர் சத்யராஜ்
காசாவில் நடந்து கொண்டிருக்கும் படுகொலை என்பது சகித்து கொள்ள முடியாதது. மனிதாபிமானம் இல்லாமல் எப்படி குண்டு போட முடிகிறது. ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, எப்படி அவர்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது.
நடிகர் பிரகாஷ்ராஜ்
காசாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குல் நடத்தியதற்கு இஸ்ரேல் மட்டும் காரணமல்ல. அதற்குத் துணையாக இருக்கின்ற அமெரிக்காவும் காரணம். இந்த தாக்குதலை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதனும் காரணம். பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. எனவே அவரும் இந்த படுகொலைக்கு பொறுப்பு.
நடிகை தியா மிர்சா
காசாவை வாழ விடுங்கள் என்ற சுவரொட்டியை காட்டிய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
நடிகை பாத்திமா சானா ஷேக்
பாலஸ்தீனத்தின் ரபாவில் தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகளின் அதிர்ச்சி வீடியோவை கண்டேன். இது எப்போது முடிவுக்கு வரும்?
நடிகை ராதிகா ஆப்தே
பாலஸ்தீனத்தின் ரபாவிலிருந்து வெளியாகும் வீடியோக்கள் மிகவும் கொடூரமானவை, அதிர்ச்சிக்கரமானவை. இதுவரை நாம் கண்டதை விட மிகவும் அதிர்ச்சிகரமானவை.
நடிகர் எமி ஜாக்சன்
தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் பணிபுரியும் பிரிட்டிஷ் நடிகரும் மாடலுமான எமி ஜாக்சன் வெளியிட்டு இருந்த பதிவில், '' அப்பாவி மக்கள் இனப்படுகொலையைச் சகித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் சலுகை பெற்ற வாழ்க்கையை வாழ்வது வேதனை அளிக்கிறது. நாங்கள் ஒரு போர் நிறுத்தத்தை கோருகிறோம். பாலஸ்தீன மக்கள் சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர். அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கொலைக்கு எந்த நியாயமும் இல்லை.
நடிகை சோனம் கபூர்
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த போர் பிரச்னை விரைவில், முடிவு பெற வேண்டும்.
நடிகை சமந்தா
சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் ரபாவில் தனது ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்த பிறகும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த பயங்கரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. தப்பிச் செல்ல பாதுகாப்பான இடம் எங்கும் இல்லை. இது நிறுத்தப்பட வேண்டும். இப்போதே போர்நிறுத்தம் வேண்டும்.
அதேபோல், நடிகை கவுஹர் கான், நடிகர் ஷாருக்கான், நடிகை ஆலியா பட், நடிகை வருண் தவான், நடிகை ஸ்வரா பாஸ்கர், நடிகரும், இயக்குனருமான நஸ்ருதீன் ஷா ஆகியோரும் காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.
இவர்கள் யாருமே, தற்போது வங்கதேசத்தில் நடக்கும் வன்முறை தொடர்பாக வாய் திறந்து எதுவும் பேசவில்லை என்பது இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
நடை பிணங்கள் ....சோத்துக்ககாக எந்த கேவல நிலைக்கும் செல்லும் தேசப்பற்று இல்லாத கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இது ...
இவர்கள் இங்கே இருக்கும் தேச விரோதிகள்
this braud peoples are must be shot it out on the spot, this all are barking dogs for biscuit
இவர்கள் 200 ரூபாய்க்கு கருத்து போடுபவர்கள் இல்லை. 200லட்சம் வாங்கிக்கொண்டு கூவும் கும்பல். கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.
யூதர் கூட்டம் அடங்கி தான் இருக்கனும் , ஸ்ரீலங்கா வில் மட்டும் தமிழன் சிங்களனிடம் அடங்கி போகணும் என்று சொல்லும் கூட்டம் இங்கு மட்டும் என் அலப்பறை செய்கிறார்கள்
சந்தர்பவாத கோமா..
வெட்டி பயலுக. தங்களை விளம்பர படுத்தி கொள்ள வேண்டும் . மனித நேயம் என்பது உலகம் உள்ள இஸ்லாமியர்களுக்கு மட்டும். வங்கதேச ஹிந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லை போலும் . செலெக்ட்டிவ் அம்னிஷியா
இவர்கள் இந்தியர்கள் தானா? கேவலம் ஜாதிவெறி இந்த அளவு இந்திய அரசியலில் இருப்பதை பார்த்து வேதனையாக இருக்கிறது
பங்களாதேஷ் உருவாக காரண கர்த்தாவாக இருந்த இந்திரகாந்தி யின் உறவுகள் வாய்மூடி இருக்கின்றன.
ஒரு இந்தியன் தான் இந்தியாவில் வாழ வேண்டும் அவன் எந்த மதத்தை சேர்ந்தவளாகவும் இருக்கலாம் .
இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொடுரமாக கொலை செய்யப்பட்ட இந்துவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
இந்திய அரசு இதை எளிதாக கடந்து போக விடக்கூடாது
இந்திய ராணுவத்தின் தியாகத்தினாலும் உருவானது வங்க தேசம். இதையும் எளிதில் .மறைக்க முடியாது
நன்றி கெட்ட ஜென்மங்கள் ஒடுக்கப்பட வேண்டும்.
பாலிவுட் - தீவிரவாதம் - பாகிஸ்தானுடனான உறவு ....... இது ஒரு முக்கோண இணைப்பு .... இதில் எது பாதிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் கூக்குரலிடுவார்கள் ....
காஸாவின் மேல் காதல் கொண்ட காச நோய் காரர்கள்மேலும்
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு