குறளை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
சென்னை: சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும். அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்;
அன்புக்கும் பொறுமைக்கும் கருணைக்கும் உலகம் முழுக்க அடையாளமாகத் திகழும் இயேசுநாதர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு" என்ற வள்ளுவப் பெருந்தகை காட்டிய குறள் நெறியினைப் போலவே, அன்பின் வடிவாக நின்று, ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்ணத்தை காட்டுங்கள் என்று கூறியதோடு மட்டுமின்றி அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர் இயேசு பெருமான் அவர்கள்.
தமிழ்நாட்டில் உரிமைகளுக்காகவும், உள்ள கிறிஸ்தவ அவர்தம் சகோதரர்களின் வளர்ச்சிக்காவும் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி, அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரும் அரசாக நமது திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
கழக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும். அவர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படிதான் என்றுமே இந்த ஆட்சி தொடரும்.
இயேசுபிரான் காட்டிய அன்பு வழி மற்றும் சகோதரத்துவம் ஆகிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜராஜ சோழன் செய்தது போல் தமிழகத்துக்கு மற்றும் இந்தியாவுக்கு விரோதமாக இருக்கும் திருட்டு திராவிடத்தையும் காண்கிரசையும் சொத்துக்களை பறிமுதல் செய்து நாடு கடத்த வேண்டும்.
புலால் உண்ணாமை கள்ளுண்ணாமை பிறர் மனை விழையாமை பற்றி எப்ப பேசுவீங்க.
ஆதி பகவன் முதற்றே உலகு எனதான் சொன்னார் யேசு முதற்றே உலகு என சொல்லவில்லை.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் இதுவும் உலகப் பொதுமறை தமிழ் மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிய குறள்தான்!
சிஎம் ஆக வாய்க்கு வந்தபடி வாழ்த்து சொல்வது இதுதான் கடைசி முறை... சொல்லிட்டு போகட்டும். அடுத்த வருடம் சிறுபான்மை தலைவர் கூறும் வாழ்த்தை கேட்க ஆள் இருக்காது.
கிறிஸ்தவ சகோதரர்களின் வளர்ச்சிக்காவும் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி, அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரும் அரசாக தமது திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது என்ற உண்மையை ஸ்டாலின் ஒத்துக்கொண்டுள்ளார் . நாள்தோறும் யாருக்காக படுபடுகிறார் என்று அவரே சொல்லி விட்டார். இப்பொழுதாவது நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தற்போதைய முதல்வர் எப்படிப்பட்டவர் என்று. ஹிந்து சமுதாயம் இப்பொழுதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
விடுமுறை தின நல்வாழ்த்துகள்
அறத்து பால் - தர்மம் 380 குறள்கள் பொருட்பால் - செல்வம் 700 குறள்கள் காமத்து பால் - அன்பு விருப்பம் 250 குறள்கள் இவை அனைத்தும் ஹிந்து மதத்தின் அடிபடை தத்துவங்கள். இதற்கும் பாலைவன மதங்களுக்கும் என்ன சம்பந்தம்.
தொல்காப்பியம் தொடங்கி, ஆழ்வார் பாடல்கள், திருவாசகம், சமண, பௌத்த பாடல்கள் அனைத்திலும் ஹிந்து தெய்வங்கள் தானே பாடப்பட்டு உள்ளது. அதனால் தானே ஈரோடு பெரியவர், தமிழே ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சமஸ்க்ருத மொழியில் சொன்னார். அது கூட தமிழ் கிடையாது.
இவருக்கு குறளை பற்றி அஞ்சாறு தெரிந்துவிட்டது, விளங்கிவிட்டது.
திமுக விசிகவுக்கு இனி வோட்டு போட கூடாது. சூடு சுரனை இல்லாதவர் மட்டுமே வோட்டு போடுவார்கள்.மேலும்
-
வடமாநிலங்களில் உறைபனி எதிரொலி; தேங்காய் எண்ணெய் விலை 15 கிலோ டின் ரூ.2,000 சரிவு
-
வருத்தம் மட்டும் போதாது; நடவடிக்கை தேவை: வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்
-
கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தைக்குட்டி உயிரிழந்த சோகம்
-
நான்கு மாநிலங்களில் 6 தொகுதிகளில்... இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் வாஜ்பாய்!
-
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; டில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.1,02,560!