மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்

மும்பை: உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகிய இருவரின் கூட்டணி மும்பை வளர்ச்சிக்கானது அல்ல, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மட்டுமே என்று மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார்.

ஜனவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, தாக்கரே சகோதரர்கள்,20 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி அமைத்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இருவரையும் ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:
உத்தவ் தாக்கரே (சிவசேனா யுபிடி) மற்றும் ராஜ் தாக்கரே (எம்என்எஸ்) ஆகியோர் இணைந்து உள்ள போட்டோவின் வெளிப்பாட்டில்உண்மையான மக்கள் சேவை இல்லை.
முந்தைய ஆட்சியின்போது தாக்கரே சகோதரர்கள், மும்பையின் முக்கிய வளர்ச்சி திட்டங்களை தடுத்தனர், மராத்தி பேசும் மக்களை மும்பையிலிருந்து வெளியேற்றினர்.
பால் தாக்கரேவின் உண்மையான வாரிசு யார் என்ற அரசியல் போரில், கடந்த தேர்தல்கள் மக்கள் யார் பக்கம் என்பது நிரூபணம் ஆனது.


மகாயுதி அரசு, மும்பை மறுசீரமைப்பு மற்றும் கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் நகரின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறது.இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

Advertisement