ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்: தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்
சென்னை: கரூர் குளித்தலையில் நடந்த, தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் அரசை கண்டித்து, கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.
நுாறு நாள் வேலை திட்டம் மாற்றத்தை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில்,நேற்று தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கோஷங்களை எழுப்பிய, வி.சி., நிர்வாகி, 'கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம், ஸ்டாலின் அரசை கண்டிக்கின்றோம்' எனக் கோஷமிட, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர், அதை திரும்ப கூறினர்.
அதன்பின் சுதாரித்த, தி.மு.க., நிர்வாகி, கோபத்துடன் வி.சி., நிர்வாகியிடம் இருந்து மைக்கை பிடுங்கி, மற்றொருவரிடம் வழங்கினார். அவர், ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம், மோடிக்கு வால் பிடிக்கும் ஆர்ப்பாட்டம், 100 நாள் வேலையை நிறுத்த துடிக்கும் ஆர்ப்பாட்டம் எனக் கோஷமிட, மற்றவர்கள் கோஷமிடலாமா, வேண்டாமா என தவிக்க, கூட்டத்தில் பெண்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
விசி கட்சி மற்றும் திமுக கட்சியினர் விசேஷ பானம் உட்கொண்டதால் யாரை உண்மையாக கண்டிக்க வேண்டுமோ அவர்களை கண்டித்தனர். விசேஷ பானம் கிடைக்காத நிலையில் ஒருவர் மட்டும் மாற்றி பேசியுள்ளார்
Visiமேலும்
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி
-
வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
-
சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி