சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு

புதுடில்லி: கிரிக்கெட்டில் சச்சின் போல இளம் வயதில் வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் பாராட்டி உள்ளார்.

33வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் போட்டியில் பீஹார், அருணாச்சல் ஆகிய அணிகள் விளையாடி வருகிறது.முதலில் பேட்டிங் செய்த பீஹார் அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தொடக்க ஆட்டக்காராக விளையாடி 36 பந்தில் சதம் அடித்தார்.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். மே லும் 59 பந்துகளில் 150 ரன்கள் எட்டியபோது அதிவேக 150 ரன்கள் எடுத்த ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார்.

இறுதியாக அவர் 84 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 190 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர் ஏற்கனவே 2025 பிரீமியர் கிரிக்கெட் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்து, டி20 ஆண்கள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளைய வீரர் ஆனார்.

சசிதரூர் பாராட்டு:

கிரிக்கெட்டில் ஏற்கனவே சச்சின், தனது 14 வயதில் அபாரமான கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்தார். அதுபோல வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாடட்டும்.

இவ்வாறு சசிதரூர் பாராட்டியுள்ளார்.

Advertisement