விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.289.63 கோடி மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை;

வடகிழக்குப் பருவ மழை நவம்பர் - டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி தவறிய மாதம் பெய்த பருவம் மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு ரூ.289.63 கோடி நிவரணத் தொகை ஒப்பளிப்பு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டது.

வேளாண்மைத் துறைக்கு தலையாய இடம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கென 5 தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, வேளாண் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும். உழவர்களின் நலன் காக்கவும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

எப்போதெல்லாம் இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அரசானது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.

அந்த வகையில், வடகிழக்குப் பருவ மழை நவம்பர் -டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வர் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பரப்பினை உறுதிசெய்து, அதன் அடிப்படையில் கலெக்டர்களிடமிருந்து நிவாரணத்தொகை வேண்டி கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.

76,132 ஏக்கரும், இதன்படி, வேளாண் பயிர்கள் 4.90 லட்சம் ஏக்கரும், தோட்டக்கலைப் பயிர்கள் 5.66 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டது 61,601 என மொத்தம் கணக்கிடப்பட்டது.

இக்கணக்கெடுப்பின்படி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக 289.63 கோடி ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 3.60 லட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவின்படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட 2.80 லட்சம் வேளாண் பயிர் விவசாயிகளுக்கு 254.38 கோடி ரூபாயும், பாதிக்கப்பட்ட 80,383 தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்கு 35.25 கோடி ரூபாயும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இவ்வாறு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறி உள்ளார்.

Advertisement