கூட்டுறவு நகர வங்கியில் மேலாண் இயக்குனர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில், தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர் பிருந்தா ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, வங்கியில் இருந்து வழங்கப்பட்ட மொத்த கடன் தொகைகளின் விவரத்தை கேட்டறிந்தார்.

மேலும், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், நகை கடன், வீட்டு அடமான கடன், கல்விக்கடன், சிறு வணிக கடன், பணிபுரியும் மகளிர் கடன், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ கடன்களின் பதிவேடுகள், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், நிலுவை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் ராகினி, மாவட்ட ஒன்றிய மேலாண் இயக்குனர் விக்ரமன், வங்கி பொது மேலாளர் (பொறுப்பு) குமார், மேலாளர் (பொறுப்பு) செல்வக்குமார் உடனிருந்தனர்.

Advertisement