அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில், நான்கு கட்சிகள் இடையே போட்டி உருவாகியுள்ளது. இதனையடுத்து கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியவற்றை துவக்கி உள்ளன. அதே கட்சிகளுடன் களமிறங்க உள்ள திமுக, கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் உடன் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேவல், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அமைத்துள்ளார்.
இந்த குழுவில்
நத்தம் விஸ்வநாதன்
பொன்னையன்
ஜெயக்குமார்
பொள்ளாச்சி ஜெயராமன்
சி.வி.சண்முகம்
செம்மலை
வளர்மதி
ஓ.எஸ்.மணியன்
உதயகுமார்
வைகை செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கை தயாரிப்பார்கள் எனவும், சுற்றுப் பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சுற்றுபயணம் செல்லும் போது ஜெயக்குமாரை மெயின் ரோடு பக்கம் போல விடாதீர்கள்.
தமிழ்நாட்டில் மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED. கீழ் கொண்டுவரப்படும். அரசுடமை ஆக்கப்படும். தனியார் மதுபான தொழிற்சாலை நடத்த அனுமதி கிடையாது என்று அறிவியுங்கள். பூரண மதுவிலக்குலாம் சாத்தியமில்லை. மதுக்கடைகளை பாதியாக குறைக்கலாம், கடை திறந்து இருக்கும் நேரம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே. டாஸ்மாக் மதுவிற்பனையில் நோ கேஷ், ஒன்லி க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் , ஜி பே, டிஜிட்டல் ட்ரான்சக்ஷனில் மட்டுமே என்று அறிவிக்க வேண்டும். மறுநாளே குடிமக்கள் கார்டும் கையுமாக ஒழுக்கமாக க்யூவில் நிற்பார்கள். இதை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி முடிவான பின் அண்ணா திமுக தனியாக தேர்தல் அறிக்கை எதற்கு? 10 பேர் குழு பின் 20 பேர்கள் செல்வது கடினம். மாநிலம் முழுவதும் பரவலாக செல்வாக்கு தேவை. தேர்தல் ஆணைய வாக்காளர் சீர் திருத்தம் வலுவான கூட்டணி வெற்றியை மட்டும் தீர்மானிக்கும். பல ஊழல் பிரச்சனை எதிர்கொள்ள திமுகவிற்கு ஆட்சி தேவை. எடப்பாடி கூட்டணி மூலம் மட்டும் வெற்றி பெற முடியும் . பிஜேபி தவிர்த்து திமுக கூட்டணி தான் அண்ணா திமுக கட்சிக்கு வாழ்வு கொடுக்கும்.செங்கோட்டையன் விலக்கம், அண்ணாமலை முடக்கம் எடப்பாடி ஆதிக்க புலன் தெரிகிறது. தன் கிராமம் செல்வாக்கை மாநில செல்வாக்கு என்று நினைக்கிறார்?
நடக்காத கல்யாணத்துக்கு
நாதஸ்வரம் ஊத கூடாது.
எல்லாரும் அயோக்கியர்கள், நல்ல இருந்த கட்சியை சீரழித்த சுயநலவாதி
ஐயா இந்த குழுவில் கல்யாணசுந்தரம் போன்றவர்களையும் serthu கொள்ளவும்.