பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
போபால்: '' பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம் காரணம் காரணம் எனவும், இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
ம.பி., மாநிலம் ரேவா என்ற இடத்தில் நடந்த இயற்கை வேளாண்மை குறித்த மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: மண் முதல் ஆய்வக சோதனை வரையிலும், உலக சந்தைக்கு சென்றடையும் வகையில் செய்ய மத்திய அரசு ஒரு முழுமையான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
இன்று பல நோய்களுக்கு மூல காரணமாக ரசாயன உரங்கள் உள்ளன. இதற்கு மாற்றான இயற்கை விவசாயம், விவசாயிகளின் வருமானத்தை குறைக்காது. மாற்றாக, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள் தூய்மையானதாக இருக்கும். இயற்கை விவசாயம் வருமானத்தை அதிகரிக்கும். தண்ணீரை மிச்சப்படுத்தும். மக்களை நோய்களில் இருந்து விடுவிக்கும்.
நாடு முழுவதும் 40 லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறி உள்ளனர். எனது சொந்த நிலத்திலும் இயற்கை விவசாயத்தை செய்துள்ளேன். உற்பத்தி குறையவில்லை. அதிகரித்துள்ளது.
இயற்கை விவசாயத்துக்கு உலகளவில் பெரிய சந்தை உள்ளது. இந்திய விவசாயிகள் தயாரிக்கும் பொருட்கள் உலக சந்தையை சென்றடைவதற்கான முழுமையான அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக போபாலில் நடந்த செமி கண்டக்டர் தொடர்பான மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: செமி கண்டக்டர் துறையில் இந்தியா வலிமையாக நுழைந்துள்ளது. ஆனால், தாமதமாக நுழைந்துள்ளோம். இருப்பினும், செமி கண்டக்டர் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எனத் தெரிவித்தார்.
அதனால்தான் வருடத்திற்கு 2 லட்சம் கோடிகளை மானியமாக உர கம்பெனிகளுக்கு அள்ளி கொடுக்கின்ற குரங்கு நீ.
அதானி உரக் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறார்
சரியாக சொன்னீர்கள்.
பல நோய்களுக்கு காரணம் ""செயற்கை உரம்""
பின் ஏன் சிக்கிம் மாநிலத்தை பின் பற்றி ""ரசாயன உரங்களை"" தடை செய்ய தயங்குறீர்கள்