மின் கட்டணத்தை சேமிக்கும் வழிமுறைகள் தேனி கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பேட்டி
தேனி: ஆண்டுதோறும் டிச.14 முதல் 20 வரை தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது. தேனி கோட்ட மின்வாரியம் சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. மின் சிக்கனம் குறித்து தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி பகுதிக்காக தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி அளித்த பேட்டி
மின் சிக்கனம் அவசியம் என்கிறீர்களே ஏன், எதனால் நம் பூமிப்பந்தில் வசிக்கும் மக்களை சூரியனின் ஊதாக்கதிர்களிடம் இருந்து காக்க இயற்கை வழங்கிய அற்புத படைப்பு வழிமண்டலம். இதிலுள்ள ஓசோன் படலத்தை கரைக்கும் ரசாயனங்கள் தான் குளோரோ புளோரோ கார்பன், ஹாலோன்கள் போன்றவை. இவற்றை கட்டுப்படுத்த உலகளவில் 'மாண்ட்ரீல் ஒப்பந்தம்' ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி உலக நாடுகள் 2015ல் 10 சதவீதம் குறைக்கவும், 2020ல் 35 சதவீதம், 2025ல் 67.5 சதவீதம், 2030ல் 100 சததவீதம் குறைத்து ஓசோன் படலத்தை காக்க தீர்மானித்துள்ளனர். இது முக்கிய அம்சம். இந்த இலக்கை நோக்கி மின் சிக்கனம் நடவடிக்கைகள் அனைத்து நாடுகளும் பின் பற்ற வேண்டும். நம் நாட்டில் மின்சார தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விலை உயர்ந்த மின் உற்பத்தியைக் குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், குறிப்பாக எதிர்கால நம் சந்ததியினருக்கு ஆற்றலை சேமிக்க மின் சிக்கனம் அவசியம். மின்சாரம் வற்றாத வளம் அல்ல. அதன் உற்பத்திக்கு நிலக்கரி, நீர் போன்றவை தேவைப்படுகிறது. இந்த வளங்கள் குறையும் போது, உற்பத்தி பாதிக்கும். மக்கள் தொகை பெருக்கம் மிகுந்த நம் நாட்டில், தேவை அதிகரிக்கும் போது தட்டுப்பாட்டை சமாளிக்க மின் சிக்கனம் அவசர அத்தியாவசிய தேவையாக உள்ளது.
குளோரோ புளோரோ கார்பன் பாதிப்பு குறித்து ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களில் அறையில் நிலவும் வெப்பத்தை வெளியில் கடத்தவும், வீட்டிற்கு வெளியில் உள்ள குளிர்ந்த காற்றை உட்கொண்டு வந்து அறையை குளிர்விக்கும் பணியை குளிர்விப்பான்கள் (Rrfrigerant) செய்கின்றன. இதில் நாம் பயன்படுத்திய பழைய ப்ரிட்ஜை மாற்றும் போதும், உடைப்புக்கு வழங்கும் போதும் முறையான நிறுவனத்தில் வழங்க வேண்டும்.
மாறாக குப்பையில் இட்டு மக்கள் செல்கின்றனர். இதனால்தான் இந்த குளிர்விப்பானில் இருந்து உருவாகும் குளோரின், புளோரின் அணுக்கள், குளோரோ புளோரோ கார்பனாக (சி.எப்.சி.,) மாறி நம் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தை சிதைக்கிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்திவிட்டு குப்பையில் போடு பிரிட்ஜில் இருந்து வழிமண்டலத்தை துளைக்கும் அணுக்கள் செல்கின்றன. அதுவும் இந்த குளோரோ புளோரோ கார்பன் ஆனது வழிமண்டலத்தில் ஓசோன் லேயரை உடைக்கின்றன. ஒரு அணு, 100 ஆண்டுகள் தங்கி உடைக்கக்கூடிய தன்மை கொண்டது. அதனால்தான் குளிர்விப்பான்கள் திறன்களை தற்போது மாற்றப்பட்டு புதிய குளிர்விப்பான்கள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பிணும் பழைய பிரிட்ஜ், ஏ.சி.யை, அகற்றும் போது மக்கள் கவனமாக இருப்பது அவசியம்.
மின் கட்டணத்தை குறைக்கும் ஏ.சி., பயன்பாடு குறித்து நாம் வீடுகளுக்கு சென்றதும் உடனடி குளிர்ச்சி வேண்டும் உடலின் தேவை கருதி ஏ.சி.,யை 18 டிகிரி செல்சியஸ் வைக்கின்றோம். இது முற்றிலும் தவறு. மனித உடலுக்கான உலகளாவிய வரையறுக்கப்பட்ட குளிர்ச்சி குறியீடு 23 டிகிரி செல்சியஸில் இருந்து 25 டிகிரி செல்சியஸ் ஆகும். இதில் மனித உடலுக்கான ஒப்பீட்டு அளவிலான ஈரப்பதம் (Relative Humidity) 55 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக இருக்கும். இயல்பாக மனித தேவையின் பால் 22 டிகிரி செல்சியஸ் டூ 27 டிகிரி செல்சியஸ் வைத்தால் ஒரு மணி நேரத்தில் செலவாகும் 5 யூனிட் மின்சாரம், பாதியாக 2.5 யூனிட்டாக குறையும். இதில் மின் கட்டணத்தை சேமிக்கலாம். மாறாக 18 டிகிரி செல்சியல் வைத்தால் மின் கட்டணம் 2 மடங்கு அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஒன்றரை டன் ஏ.சி., ஒரு மணி நேரத்தில் 18 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தினால் 5 யூனிட் செலவாகும். அதையே 24 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தினால் 2.5 யூனிட்தான் மின் செலவு ஆகும். இதனால் மின் கட்டணம் குறையும்.
பிரிட்ஜ் பயன்பாடு குறித்து பிரிட்ஜ் பயன்படுத்தும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது. இல்லத்தரசிகள் இந்த தவறை அடிக்கடி செய்கிறீர்கள். 'லீக்கேஜ்' ஆனாலும் மின்கட்டணம் அதிகரிக்கும். இதனால் பிரிட்ஜ் கதவின் பெல்ட் சேதமடைந்துள்ளதா என பார்க்க வேண்டும். பின்புற சுவரை விட்டு 10 இஞ்ச் இடைவெளி விட்டு வைக்க வேண்டும். அப்போது தான் பிரிட்ஜில் உள்ள குளிர்விப்பான் வெப்பம் கடத்த முடியும். சுவரை ஓட்டி வைப்பதால் பிரிட்ஜ் சூடாகி, பிரச்னைகள் ஏற்படும். இதனை கவனத்தில் கொண்டு, பிரிட்ஜை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மின்விசிறி (பேனில்) இறக்கையில் படரும் துாசி கூட, திறனை குறைத்து மின்கட்டணத்தை உயர்த்திவிடும். இதனால் மின்விசிறி இறக்கைகளை மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். மேலும் சி.எப்.எல்., எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்தினால் மின் கட்டணத்தை சேமிக்கலாம்.
தனிநபர் மின்சார நுகர்வுதிறன் எவ்வாறு உள்ளது ஒரு நாட்டின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதை தனி மனித நுகர்வுத்திறனை வைத்துத்தான் கணக்கிடுவர். இதற்கு பெயர் INDIA PERCAPITA CONSUMPTION ஆகும். உலகளவில் ஒரு மனிதர் ஓராண்டிற்கு சராசரி 3486 யூனிட் பயன்படுத்துகிறார். தற்போது இந்தியாவில் ஒரு தனிமனிதன் 2024 - 2025 ல் ஓராண்டிற்கு பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 1538 யூனிட் ஆகும். நாள் ஒன்றுக்கு 4.2 யூனிட் செலவழிக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தனிமனிதர் 4.93 யூனிட் நாள் ஒன்றுக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆக மின்சாரத்தை நாம் பயன்படுத்துவதில் தன்னிறைவு பெற்றுள்ளோம். ஆனால் உற்பத்தி, அதற்கான மூலப்பொருள்களான தணணீர், நிலக்கரி, ஆயில் போன்றவற்றில் நிலக்கரி , ஆயிலை நாம் இறக்குமதி செய்துதான் ஆக வேண்டிய நிலை உள்ளது. இதனால் மின் சிக்கனம் நம் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்., என்றார்.
மேலும்
-
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
-
ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்திப்பு
-
த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
-
திருப்பரங்குன்றத்தை 'சிக்கந்தர் மலை' என்பதா? மா.கம்யூ., சண்முகத்துக்கு கடும் கண்டனம்
-
'தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு'; அண்ணாமலை பேட்டி