அய்யனார் கோவில் குளம் சீரமைக்க வலியுறுத்தல்
மதுராந்தகம்: சிலாவட்டம் அடுத்த அய்யனார் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, சிலாவட்டம் ஊராட்சியில், சென்னை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அய்யனார் கோவில் குளம் முழுதும் ஆகாய தாமரை மற்றும் பாசி படர்ந்து உள்ளது. குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது.
தண்ணீரில் பாசி படர்ந்து உள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய அய்யனார் கோவில் குளம், தற்போது பயன்பாடின்றி, குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளது.
நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்.
எனவே, குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, குளக்கரை பகுதிகளில் நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், கழிவுகளை அகற்ற மதுராந்தகம் வட்டார வளர்ச்சி ஊராட்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
-
ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்திப்பு
-
த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
-
திருப்பரங்குன்றத்தை 'சிக்கந்தர் மலை' என்பதா? மா.கம்யூ., சண்முகத்துக்கு கடும் கண்டனம்
-
'தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு'; அண்ணாமலை பேட்டி