பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி... 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் குரலாக ஒலித்த புடின்!
மாஸ்கோ: அணு ஆயுதங்களை வைத்து பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்து வருவதாக, கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம், ரஷ்ய அதிபர் புடின் குற்றம்சாட்டியது, 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு ஸ்லோவேனியாவில் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் ரஷ்ய அதிபர் புடினின் தனிப்பட்ட சந்திப்பு குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு காப்பகம், இருவரின் உரையாடல் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தான் அணுஆயுதங்களை வைத்திருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் ரஷ்ய அதிபர் புடின் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பர்வேஷ் முஷாரப்பின் ஆட்சியை, அணு ஆயுதங்களைக் கொண்ட ராணுவ ஆட்சி என்றும் புடின் விமர்சித்துள்ளார்.
புடின் கூறியதாவது; நான் பாகிஸ்தானைப் பற்றி கவலைப்படுகிறேன். அங்கு அணு ஆயுதங்கள் கொண்ட ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. அது மக்களாட்சி அல்ல. இதனை மேற்கு நாடுகள் கண்டிக்கவில்லை. இதைப் பற்றி பேச வேண்டும். எனக் கூறினார்.
அப்போது, அமெரிக்க - ரஷ்யா மோதல் பெரிய அச்சுறுத்தல் கிடையாது என்று கூறிய அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு பதிலளித்த புடின், "எனக்குத் தெரியும். நான் அமெரிக்காவை ஒருபோதும் அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. போர் காலத்திலும் கூட, சீனா மற்றும் 50 ஆண்டுகளைப் பற்றி நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் கவனமாகக் கண்காணித்து வருகிறோம்," என்றார்.
சட்டவிரோத அணுஆயுதங்களின் மூலம் பாகிஸ்தான், தங்கள் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்று நீண்ட காலமாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த இரு உலகத் தலைவர்களின் உரையாடலின் போது, இந்தியாவின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக, புடின் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்
-
மீண்டும் தேர்தல் அறிக்கை குழு... முதல்வருக்கு கூச்சமாக இல்லையா? கேட்கிறார் அண்ணாமலை
-
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
-
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
-
ஆந்திராவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி
-
2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை