மீண்டும் தேர்தல் அறிக்கை குழு... முதல்வருக்கு கூச்சமாக இல்லையா? கேட்கிறார் அண்ணாமலை
சென்னை: கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதல்வர் ஸ்டாலினுக்குக் கூச்சமாக இல்லையா? என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை; சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இன்று போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் ஆகியும், எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 311ல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறியிருந்ததை நிறைவேற்றக் கோரி தமிழக பாஜ சார்பில் பலமுறை வலியுறுத்தி வருகிறோம்.
மேலும், இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தியும், திமுக அரசு அவர்களைக் கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது, கைது நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதல்வர் ஸ்டாலினுக்குக் கூச்சமாக இல்லையா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (55)
M.Sam - coimbatore,இந்தியா
26 டிச,2025 - 20:12 Report Abuse
முதல உனக்கு கூச்சம் நாசம் ஏதாவது இருக்க 0
0
vivek - ,
26 டிச,2025 - 22:16Report Abuse
சாம் நீ பெரிய சொம்பு என்று எங்களுக்கு தெரியுமே 0
0
Reply
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
26 டிச,2025 - 17:57 Report Abuse
எப்படியாவது கஜானாவை தொடைத்து பொங்கலுக்கு பெண்களுக்கு ரூ 3000 கொடுத்தால் போதும் ..கேடுகெட்ட அரசாங்கங்கள் . 0
0
Reply
makesh - kumbakonam,இந்தியா
26 டிச,2025 - 17:04 Report Abuse
கடந்த 5 வருடத்தில் திமுக செய்த திட்டங்களையும் அதற்கு முன்பு அதிமுக 5 ஆண்டு செய்த திட்டங்களையும் ஒப்பீட்டால் தெரியும் 0
0
Reply
jss - ,
26 டிச,2025 - 17:02 Report Abuse
திருடர்களுக்கு வெக்கும் மானம் நாச்சம் கூச்சம் எல்லாம் ஒன்றும் கிடையாது. இப்பொது 1000 வாக்குறுதிகள் கொடுத்து மக்களை திசை திருப்புவார். அப்பாவி பொன்றவர்கள் துணையுடன் மறுஙடியும் தமிழகத்தை ஏமாற்றத் தயார் 0
0
Reply
Sakthivelu Thiyagarajan - ,இந்தியா
26 டிச,2025 - 17:01 Report Abuse
சொன்ன வார்த்தை காப்பாற்றாத ஸ்டாலினுக்கு மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கையா யாரை ஏமாற்றுவதற்கு? யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடக தேர்தல் அறிக்கை? வருகின்ற தேர்தலை புறக்கணித்துவிட்டு வேறு யாராவது வந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றுகளா என்று பார்த்து விட்டு அடுத்த தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம் அதுவே சால சிறந்தது. 0
0
Reply
நாஞ்சில் நாடோடி - ,இந்தியா
26 டிச,2025 - 16:27 Report Abuse
கூச்சம் இருந்திருந்தால் அன்று திருட்டு ரயில் ஏறியிருப்பார்களா? 0
0
Reply
முருகன் - ,
26 டிச,2025 - 16:11 Report Abuse
இவரை இவர் கட்சி ஆட்கள் மதிப்பதில்லை அதற்கு கூச்சமாக இல்லையா 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
26 டிச,2025 - 16:07 Report Abuse
முதலில் உங்க கட்சியின் முதுகை சொறிந்து கொள்ளவும். என்று அப்பாவி கேட்டிருக்குகிறார். மரக்கட்டையாய் இறுகிப்போன ஒன்றை சொரிந்து என்னத்துக்கு. i 0
0
vivek - ,
26 டிச,2025 - 16:39Report Abuse
பிரியன் நீ கூனி குறுகி முதுகு வளைந்து பிழைகணும் எதற்காக.... 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
26 டிச,2025 - 15:30 Report Abuse
Cheating ter 2.0 0
0
Reply
அப்பாவி - ,
26 டிச,2025 - 15:23 Report Abuse
முதலில் உங்க கட்சியின் முதுகை சொறிந்து கொள்ளவும். 0
0
guna - ,
26 டிச,2025 - 16:40Report Abuse
அப்பாவி எல்லாம் கருத்து சொல்வது கொடுமை 0
0
jss - ,
26 டிச,2025 - 17:05Report Abuse
ட்ர்ம்ப்பிடம் சொல்லவும் 0
0
Reply
மேலும் 41 கருத்துக்கள்...
மேலும்
-
இந்தியா வளர வேண்டியது காலத்தின் கட்டாயம்: மோகன் பாகவத்
-
அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை
-
கட்சி நிர்வாகி குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது; விஜய் மீது சரத்குமார் குற்றச்சாட்டு
-
தஞ்சையில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்; மஹாராஷ்டிரா வாலிபருக்கு மறுவாழ்வு
-
மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நிதி மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு
-
மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பஹல்காம் தாக்குதலின் நோக்கம்*: அமித் ஷா*
Advertisement
Advertisement