சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னை: திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் திமுக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர். தற்போது ஆட்சி முடியவுள்ள தருணத்தில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இதனைக் கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், டிசம்பர் 26ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். அதன்படி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி பதாகைகளை ஏந்தியபடி, முழக்கமிட்டனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
போராட்டத்தின் போது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆள்வது தமிழ் வாழ்வது தமிழ் ஆனால் தமிழ்நாட்டில் பழைய நடைமுறையின் படி தமிழ்ப் பண்டிதர் தமிழ்ப் புலவர் படித்தவர்கள் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்காண் தேர்வு எழுத இயலாமல் 40,000 தமிழ் பண்டிதர்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் இதை தமிழ்நாடு அரசு கருணையோடு ஆணை பிறப்பிக்க வேண்டும் .BA.BEDஅபிலிட் தமிழ் பண்டிதர் .பிளைட் தமிழ்ப் பண்டிதர் இணை என்று இருந்த பழைய நடைமுறையின் படித்துவிட்டு இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழ் பண்டிதர்கள் தேர்வு எழுத இயலாத நிலைக்கு புறந்தள்ளப்பட்டுள்ளார்கள் இது சென்னை மாண்பமை உயர்நீதிமன்ற இரு நீதியரசர்களின் அமர்வுக்கு சென்ற போது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என தீர்ப்பினை எழுதியுள்ளார்கள் எனவே தமிழ் தமிழ் என உச்சரிக்கின்ற மாண்பமை தமிழ்நாட்டு முதலமைச்சரவர்கள் 2008, 9, 10 ,ஆட்சி காலங்களில் நடைமுறையில் இருந்து அரசாணைகளின் படி அவர்களுக்கு மீண்டும் தமிழ்நாட்டில் தமிழ்ப் புலவர் தமிழ்ப் பண்டிதர்களுக்கு வாய்ப்பு உடனடியாக வழங்க அரசாணை பிறப்பிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம்

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்ற உணர்வுடன்தான் ஆசிரியர்கள் வேலைக்கு வருகின்றனர்...
நான்கு பட்டப்படிப்புகள், தனியார் பள்ளிகளில் மிகக்குறைந்த சம்பளத்திற்குசில ஆண்டுகள் வேலை பின்னர் டெட், டிஆர்பி தேர்வுகளை எழுதி தேர்வுப் பெற்று வேலைக்கு வந்தால் இங்கு தொகுப்பூதியம், பென்சன் இல்லை என்ற கைவிரிப்பு, ஆனால் வேலையோ மலை அளவு... நூற்றுக்கணக்கான நல திட்டங்கள், தேர்தல் பணி, கணக்கெடுப்பு பணி, முகாம்கள் பணி, பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் வேலை சுமைகள், எழுத்தர் பணி, காவலர் பணி, செவிலியர் பணி என எல்லாம் கலந்த ஒரு கலவை பணி இவற்றுக்கு நடுவே மாணவர்களுக்கு கற்பித்தல் பணி... பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறி... பேருக்குத்தான் விடுமுறை விடுமுறை நாட்களிலும் வேலை உண்டு... அரைவேக்காடுகளுக்கு இன்றைய ஆசிரியர்களின் நிலை பற்றியோ பணிகள் குறித்தோ எந்த ஒரு புரிதலும் கிடையாது...
அருகிலிருந்து பார்த்து எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்...
ஜனநாயகம் கொல்லப்பட்டு விட்டது.
அரசு எவ்வளவு தான் சம்பளம் மற்றும் சலுகைகளை, அரசு ஊழியருக்கு வாரி வாரி வழங்கினாலும், அரசு ஊழியரை திருப்திபடுத்தவே முடியாது. இவர்களே தங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் சேர்க்காத நிலையில், பொதுமக்கள் இவர்களை துளிகூட மதிப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட துறைகளை தவிர, மற்றவற்றை தனியாரின் பங்களிப்புக்கு விடுவது சரியான முடிவு. இவ்விஷயத்தில், ஆந்திராவை பார்த்து அரசு திருந்தவேண்டும்.
சே, ஒரு ஆட்சியை நடத்த உடமாட்டேங்கறாங்களே, எப்ப பார்த்தாலும் போராட்டம், வன்முறை, கைது. இப்படி இருந்தா திமுக்கிய என்ன பண்ணும்
எல்லா துறை ஊழியர்களும் போராடறாங்க. தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளுக்கு விலை போகாதீங்க .
தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஆதரவு தெரிவித்த - கொடுத்த மாநில அரசாங்க ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏறக்குறைய உறுப்பினர் அடையாள அட்டை பெறாத கட்சி உறுப்பினர்களுக்கு சமம். சிறிதும் வெட்கம் கெட்டவர்கள் இவர்களை வேலையிலிருந்து விரட்ட வேண்டும். இவர்கள் பணியில் தொடர்ந்தால் சிறிதும் பொதுநல மக்கள்நல எண்ணமின்றி தேசாபிமானமின்றி விசுவாசமின்றி திருட்டு திராவிஷ கட்சிகளுக்கே உழைப்பார்கள்.மேலும்
-
இந்தியா வளர வேண்டியது காலத்தின் கட்டாயம்: மோகன் பாகவத்
-
அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை
-
கட்சி நிர்வாகி குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது; விஜய் மீது சரத்குமார் குற்றச்சாட்டு
-
தஞ்சையில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்; மஹாராஷ்டிரா வாலிபருக்கு மறுவாழ்வு
-
மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நிதி மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு
-
மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பஹல்காம் தாக்குதலின் நோக்கம்*: அமித் ஷா*