மயிலாடுதுறையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து
நமது நிருபர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 30 பேர் காயம் அடைந்தனர்.
பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை அய்யனார்குடி நாட்டாறு சட்ரஸ் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றின் கரையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் டூவீலர்கள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 30 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த பாலையூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டதுடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
தப்பி சென்ற தனியார் ஆம்னி பஸ் டிரைவர், கண்டக்டரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்
-
மீண்டும் தேர்தல் அறிக்கை குழு... முதல்வருக்கு கூச்சமாக இல்லையா? கேட்கிறார் அண்ணாமலை
-
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
-
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
-
ஆந்திராவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி
-
2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை