கட்சி நிர்வாகி குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது; விஜய் மீது சரத்குமார் குற்றச்சாட்டு
துாத்துக்குடி: 'சொந்த கட்சியின் நிர்வாகிகளிடம் குறையை கேட்காதவர், தலைவராக இருக்க முடியாது' என த.வெ.க., தலைவர் விஜய் மீது, பா.ஜ., மூத்த தலைவர் நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டினார்.
துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் போதை பழக்கத்தால் குற்றச் சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எந்தவொரு நல்ல திட்டத்தையும் தி.மு.க., வரவேற்றதே இல்லை.
த.வெ.க., தலைவர் விஜயை ஒரு அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்திக்காத அந்த கட்சி, தற்போதுதான் களத்திற்கே வந்துள்ளது. முழுமையான அரசியல் கட்சி தலைவராக விஜய் இருப்பாரா? அரசியல் கட்சியை நடத்துவாரா? மாட்டாரா? என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியும்.
த.வெ.க., தலைவர் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்திய, அக்கட்சியின் பெண் நிர்வாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் காரை மறித்தபோது மனிதாபிமான அடிப்படையில், கீழே இறங்கி இரண்டு வார்த்தைகள் விஜய் பேசி இருந்தாலே பிரச்னை முடிந்திருக்கும். சொந்த கட்சி நிர்வாகிகளின் குறையை கேட்பவர்தான் நாயகனாகவும், கட்சி தலைவராகவும் இருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் காரில் இருந்து இறங்கி கட்சி நிர்வாகி இடம் பேசி இருக்க வேண்டும் அதுதான் கட்சித் தலைவருக்கு அழகுமேலும்
-
2030-க்குள் 48 நகரங்களில் ரயில் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்
-
அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் புரட்சி வெடிக்கும்; காடேஸ்வரா சுப்ரமணியம்
-
அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதித்தது சீனா
-
'ஆப்பரேஷன் சிந்துார் 2.0' அச்சத்தில் பாகிஸ்தான்: எல்லையில் தடுப்பு பணிகள் மும்முரம்
-
கரூரில் ஒரு கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கு ஏலம், நோன்பு திருவிழாவில் ருசிகரம்
-
டில்லியில் அடல் உணவகம்: 2நாளில் 33 ஆயிரம் பேர் வருகை