மீன் வள உதவியாளர் பணி நீச்சல் திறன் பரிசோதனை

சேலம்: மேட்டூர் மீன்வளத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள, 8 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியானது. அதற்கு, 500க்கும் மேற்பட்டோர் விண்-ணப்பித்தனர்.


மீன் வலை பின்னுதல், பழைய மீன் வலையை சரி செய்தல், வலை வீசுதல், பரிசல் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தமிழ் எழுத படிக்க தெரிதல் உள்ளிட்டவை அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் நீச்சல் தேர்வு, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. 240 பேர், நீச்சல் திறனை வெளிப்படுத்தினர்.

மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெனீபர், உதவி இயக்-குனர் உமா கலைச்செல்வி முன்னின்று நடத்தினர். இன்று, 243 பேர், நீச்சல் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement