2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!

18

நமது சிறப்பு நிருபர்




2025ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் சவுதி அரேபியாவில் இருந்து தான் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2025ம் ஆண்டில் 81 நாடுகளில் இருந்து 24,600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் இருந்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த ஆண்டில் பிற நாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு:

1. சவுதி அரேபியா-11 ஆயிரம் பேர்

2.அமெரிக்கா-3,800 பேர்

3.மியான்மர்- 1,591 பேர்

4.மலேசியா- 1485 பேர்

5. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- 1469 பேர்

6. பஹ்ரைன்- 764 பேர்

7. மலேசியா-1,485 பேர்

8.தாய்லாந்து- 481 பேர்

9. கம்போடியா-305 பேர்

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வளைகுடா நாடுகளில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கான பொதுவான காரணம் விசா அனுமதி காலத்தை மீறி தங்குதல், உரிய அனுமதி ஏதும் பெறாமல் பணி புரிதல், தொழிலாளர்கள் விதிமுறைகளை மீறுதல், முதலாளிகளை ஏமாற்றிவிட்டு தப்பி செல்வது, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது தான். வளைகுடா நாடுகளில் கட்டுமான துறையில் வேலை செய்வதற்கு இந்தியாவில் இருந்து அதிகமானோர் செல்கின்றனர்.


@quote@ அவர்களில் பலர் ஏஜென்ட் மூலம் சென்று பல சந்தர்ப்பங்களில் கூடுதல் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, நாடு கடத்தும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். வெளிநாட்டில் உரிய ஆவணம் இன்றி போலீசாரிடம் பிடிபட்டவுடன் அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். quote மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதற்கு வேறு காரணங்கள் உள்ளன.


இந்த நாடுகள், இணையத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளின் முக்கிய மையங்களாக உருவெடுத்துள்ளன. அங்கு இந்தியர்கள் அதிக ஊதியம் தரப்படும் என்ற வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள்; அல்லது ஏமாற்றி அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு மோசடி கும்பல்கள் கையில், அடிமைகளாக சிக்கிய நிலையில் சட்டவிரோத வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அத்தகைய நிலையில் பிடிபடுவோர், நாடு கடத்தப்படுகிறார்கள்.


எனவே, வெளிநாடுகளில் தரையிறங்குவதற்கு முன்பு, தொழிலாளர்கள் விதிகள் குறித்து விழிப்புணர்வு பெறுவது முக்கியம். தங்கள் விசா காலக்கெடுவை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். உள்ளூர் விதிகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க எப்போதும் ஒரு வழி தான் உள்ளது. எனவே மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement