குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

சேலம்: இந்திய குடியரசு(பிரகாஷ் அம்பேத்கர்) கட்சி சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தலைவர் உதயசூரியனார் தலைமை வகித்தார்.

அதில் பனமரத்துப்பட்டி, அம்பேத்கர் நகர் குடியிருப்பு அருகே, ஆதிதிராவிடர் சமூகத்துக்கு சொந்தமான, 9.75 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்து, அப்பகுதியில் வீடற்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த, 96 பேருக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தப்
பட்டது.

Advertisement