யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு

11

கோலாலம்பூர்: ''யார் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும். அவர்கள் பார்த்து கொள்வார்கள்'', என மலேஷியாவில் நடந்த ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

பாடல் வெளியீட்டு விழா



தவெக என்ற கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய், திரைத்துறையில் தமது கடைசி படமான '' ஜனநாயகன்'' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேஷியாவில் நடந்தது.
Latest Tamil News

விழாவில் விஜய் ''ஐயா ராசா, செல்லங்களா யார்ரா நீங்கலாம், என் நெஞ்சில் குடியிருக்கும்'' என பேச தொடங்கினார். முதலில் மலேசியாவை புகழ்ந்தார்.

நன்றி



தொடர்ந்து விஜய் பேசியதாவது: 'இலங்கைக்கு பிறகு மலேஷியாவில் அதிகமான தமிழ் மக்கள் பார்க்கிறோம். மலேஷியாவில் நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படப்பிடிப்பு கூட இங்கே தான் நடந்துள்ளது. எனது காவலன், குருவி படங்களும் இங்கே எடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை நன்றாக நடத்த உதவிய மலேஷியா அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.
Latest Tamil News

சின்ன மண் வீட்டை கட்ட சினிமா வந்தேன், நீங்கள் பங்களா கொடுத்துவிட்டீர்கள். கடந்த 30 வருடங்களாக எனது பயணத்தில் ரசிகர்கள் உடன் இருந்தார்கள். அடுத்த 30 வருடத்திற்கு நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். நன்றி என சொல்றவன் இல்ல, நன்றிக்கடன் தீர்த்து விட்டு தான் போவான் இந்த விஜய். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.

நமக்கு எதிரி தேவை



Latest Tamil News
வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல நண்பர்கள் தேவையில்லை. பலமான எதிரி தேவை. பலமான எதிரி தான் உங்களை பலமாக்குவார்கள். நான் முதல் நாளில் இருந்தே விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். ஆனால் என்னுடன் என்னுடைய ரசிகர்கள் 33 வருடங்களாக நிற்கிறார்கள். எனக்காக நின்றவர்களுக்காக இப்போ நான் நிற்கப்போகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்ந்து விஜயிடம் ''சினிமாவில் நீங்க விட்டு விட்டு போகும் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என நினைக்கிறோம். நீங்க என்ன நினைக்குறீங்க என தொகுப்பாளர்கள் கேட்டனர்.
Latest Tamil News


@quote@அதற்கு விஜய், யார் யாரை எந்த இடத்துல வைக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும். அவங்க பார்த்துப்பாங்க என்றார். quote


@quote@அரசியல் குறித்து நேரடியாக பேசவில்லை. மலேஷியாவில் அதற்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் சில விஷயங்களை மறைமுகமாக பேசினார். quote
Latest Tamil News

@block_P@அதில் ''விஜய் தனியா வருவாரா.. அணியா வருவாரா.. என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம். 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போதுகூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சஸ்பென்சில்தான் 'கிக்' இருக்கும். ஆகவே, 2026-ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது; மக்களுக்காக அதை வரவேற்க நாம் தயாராக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.block_P

விஜய் சொன்ன குட்டிக்கதை



Latest Tamil News
நிகழ்ச்சியில் பேசும் போது விஜய், '' நான் உங்களுக்கு ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஒரு ஆட்டோக்காரர் ஒரு கர்ப்பிணியை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது பயங்கர மழை பெய்ய, ஆட்டோக்காரர் அந்த பெண்ணிடம் குடையை கொடுத்து பார்த்து போ என்று சொல்கிறார். அதற்கு அந்த பெண், இந்த குடையை நான் எப்படி உங்களுக்கு கொடுப்பது எனக் கேட்க, அவர் சிரித்துவிட்டு வேறு யாராவது தேவைப்படுவோருக்கு கொடுங்கள் என சொல்லி சென்றுவிட்டார். மருத்துவமனை வாசலில் இருந்த பெரியவர் மழைக்கு பயந்து அமர்ந்திருக்கிறார். அவருக்கு இந்தப் பெண் குடையை கொடுக்க அவரும் எப்படி உங்களுக்கு திருப்பி கொடுப்பது என்று கேட்க, அந்தப் பெண்ணும் தேவைபடுவோர்களுக்கு கொடுங்க என்கிறார். அந்த பெரியவர் பஸ்சில் ஏறும்போது, அங்கிருந்த பூக்கார அம்மாவுக்கு குடையை கொடுக்கிறார். கடைசியாகஅந்தக் குடை ஒரு பள்ளிச்சிறுமியிடம் செல்கிறது. அந்த சிறுமியை அழைத்து செல்ல அவரின் தந்தை வருகிறார். மழையில் மகளை அழைத்து வர அவரிடம் குடை இல்லை. ஆனால் அந்த மகள் குடையுடன் வருகிறார். அந்த அப்பா வேறு யாரும் இல்லை, அந்த ஆட்டோக்காரர் தான், அதாவது அந்த குடை அவர் கொடுத்த குடை தான். இந்தக் கதையின் நீதி முடிந்த வரை எல்லோருக்கும் சின்ன சின்ன உதவி செய்யுங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாக அமையும். வெள்ளத்தில் தவிப்பவருக்கு படகு கொடுத்தால், நீங்கள் பாலைவனத்தில் தவிக்கும் போது அது ஒட்டகம் திரும்ப வரும்.
உங்களுக்கு கெடுதல் செய்வாரையோ பழி வாங்கினால் அந்த நாள் மட்டுமே நீங்கள் மகிழ்வீர்கள். அவரை மன்னித்தால் வாழ்நாள் முழுக்க நிம்மதி இருப்பீர்கள். யாரையும் கஷ்டப்படுத்த இல்லை இந்த வாழ்க்கை. முடிந்த வரை நல்லது செய்யுங்கள். அது வரும்காலத்தில் உங்களுக்கு கைகொடுக்கும். பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் ப்ரீயாய் விடுங்கள். என்ற குட்டிக்கதையை விஜய் கூறினார்.

Latest Tamil News


@block_Y@கடைசி பட பாடல் வெளியீட்டுவிழா என்பதால் விஜய் உணர்ச்சிவசப்படுவார், கண் கலங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரோ மேடையிலே நான் அழமாட்டேன் என்று கூறினார். அவருக்கு யார் பெற்ற மகனோ என்ற பாடலை பாடி ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர். அவரும் ரசிகர்களை குஷிப்படுத்த மேடையில் டான்ஸ் ஆடினார். block_Y
Latest Tamil News

@block_G@

ரசிகர்கள் கூட்டம்


பாடல் வெளியீட்டு விழா மலேஷியாவில் பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்தளவுக்கு கூட்டம் கூடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். விழா நடந்த அரங்கத்தில் மட்டுமே 80 ஆயிரம் பேர் அமரலாம். வெளியே நின்றவர்கள், விஜயை பார்க்க கூடியவர்கள்.block_G

நடனம்



Latest Tamil News
விஜயின் பல படங்களில் பாடிய ஆண்ட்ரியா, எஸ் பி பி சரண், க்ரிஷ், அனுராதா, திப்பு உள்ளிட்ட பாடகர்கள் விஜயின் பாடல்களை மேடையில் பாடி அசத்தினர். இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. பல கலைஞர்கள் நடனம் ஆடினர்.


சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கு நடிகர் விஜயின் அம்மா ஷோபா பாடினார்.

Advertisement