நவீன ஹிட்லர் ஆட்சி கட்டாயம் வீழ்த்தப்படும்


@quote@ உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது, தி.மு.க., அரசு மீண்டும் மீண்டும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பெரும்பாலான தி.மு.க., அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. சில ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அமலாக்கத் துறையே ஆதாரங்களை அனுப்பியுள்ளது.

அவர்களுக்கு எதிராக, சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கும் திறனும், துணிச்சலும் இல்லாத முதல்வர் ஸ்டாலின், எந்த பலமும் இல்லாத அடித்தட்டு மக்களான துாய்மை பணியாளர்கள், ஆசிரியர்களிடம் தன் வீரத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். முதல்வரின் சர்வாதிகாரம் நீதிக்கு எதிராக மட்டும் தான் பாயும் போல தெரிகிறது. ஊழல்வாதிகளை உலவவிட்டு, அடித்தட்டு மக்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் நவீன ஹிட்லர் ஆட்சி, மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,quote

Advertisement