மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர்.
மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகாவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும் 98 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் 36 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாசகர் கருத்து (3)
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
29 டிச,2025 - 15:52 Report Abuse
ஆழ்ந்த இரங்கல்கள்....
ஆந்திர மாநிலம் எலமன்சில்லி ரயில் நிலையம் அருகே டாடாநகர் எர்ணாகுளம் ரயிலில் ரெண்டு பெட்டிகள் பிரேக் பிரிக்ஷன் காரணமாக தீ பிடித்து ஒரு பெண் உயிர் இழந்து உள்ளார். மிக வருத்தமான செய்தி.. ரயில் விபத்து நடக்காத மாதம் ஏதும் உள்ளதா 0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
29 டிச,2025 - 09:39 Report Abuse
ஆழ்ந்த இரங்கல்கள் ..இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மற்றும் காயமுற்றோர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனைகள்.... 0
0
Reply
raja - ,
29 டிச,2025 - 09:09 Report Abuse
Rip 0
0
Reply
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை
-
ஈரான் அணுசக்தித் திட்டத்தை தொடங்கினால் அழித்துவிடுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி
-
மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்'
-
வீடு தேடி வரும் நர்சிங் சேவைகள்
Advertisement
Advertisement