மகுடம் சூடிய மங்கையர் மகிழ்ச்சி
@block_B@
'தினமலர்' நடத்திய கோலப்போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடலுாரில் இரண்டாவது முறையாக பங்கேற்றேன். கடந்த முறை பரிசு பெற முடியவில்லை. இந்த ஆண்டு பரிசு பெற்றே தீர வேண்டும் என கோலமிட்டேன். நினைத்ததுபடி, புள்ளிக்கோலத்தில், முதல் பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி. போட்டியில் பங்கேற்ற அனைவரும் சிறப்பான முறையில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். -சாரூண்யா, அண்ணா நகர், கடலுார்.block_B
@block_B@
கடந்தாண்டு நடந்த போட்டியில் பங்கேற்றேன். பரிசு கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் இந்தாண்டு நடந்த போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். புள்ளிக்கோலத்தில், 2 வது பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை ஏறபடுத்திய 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. தினமலர் நாளிதழ் கோலப்போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டும். -பரிமளா, கீரப்பாளையம், புவனகிரி.block_B
@block_B@
'தினமலர்' நாளிதழ் சார்பில் கோலப்போட்டி ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. மார்கழி வந்தாலே, முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்திருப்போம். ஒவ்வொரு ஆண்டும் எப்போது, போட்டி நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன். புள்ளிக்கோலத்தில், மூன்றாம் பரிசு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. -வள்ளி, தாழங்குடா.block_B
@block_B@
கடலுார் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான திட்டக்குடியில் இருந்து அதிகாலையிலேயே வந்து கோலப்போட்டியில பங்கேற்றேன். எதிர்பார்க்காத வகையில் முதல் பரிசு வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மார்கழி மாதத்தில் தினசரி அதிகாலை கோலமிடுவது பெண்களின் உடலுக்கு நல்லது. தற்போதுள்ள பெண் பிள்ளைகள் நமது பாரம்பரிய கோலத்தை தினசரி போட வேண்டும். ஜெயந்தி, மாப்புடையூர், திட்டக்குடி.block_B
@block_B@
பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ரங்கோலியில், 2 வது பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 'தினமலர் சார்பில்' புதுச்சேரியில் நடந்த போட்டியில் குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்டேன். இதுவே கோலப்போட்டியில் பங்கேற்பதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தியது. கோலமிடும் வழக்கத்தை ஊக்கப்படுத்தும் தினமலரின் சேவை பாராட்டுக்குரியது. -ஆர்த்தி, வண்ணாரப்பாளையம், கடலுார்.block_B
@block_B@
தினமலர் கோலப் போட்டி அறிவிப்பு செய்ததில் இருந்து பங்கேற்க ஆர்வமாக இருந்து வந்தேன். மூன்றாம் பரிசு பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிகழ்ச்சி வருங்கால பெண்களுக்கு கோலம் போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வரும் காலங்களிலும் இதுபோன்று தினமலர் கோலப் போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். கவிதா, சின்ன கங்கணாங்குப்பம்.block_B
@block_B@
'தினமலர்' கோலப்போட்டி எப்போது நடக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து பங்கேற்றேன். இரண்டாவது முறையாக கலந்து கொண்டு, டிசைன் கோலத்தில் முதல் பரிசு பெற்றது அளவில்லாத சந்தோஷமாக உள்ளது. பெண்களை ஊக்குவிக்கும் வகையில் கோலப்போட்டி நடத்தும் தினமலர் நாளிதழுக்கு நன்றி. -உமா, ஆனைக்குப்பம்.block_B
இன்றைய இளம் தலைமுறை பெண்களிடம் கோலம் போடும் பழக்கம் குறைந்து வருகிறது. அந்த கலையை தினமலர் நாளிதழ், கோலப்போட்டி மூலம் மீட்டு எடுத்து வருகிறது. கடலுாரில் கோலப்போட்டி நடத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. -சுபா, துாக்கணாம்பாக்கம்.
@block_B@
பசுமை பாதுகாப்பு, தமிழர்களின் பாரம்பரிய உடை குறித்த விழிப்புணர்வு தொடர்பாக கோலமிட்டேன். கடந்தாண்டு நடந்த போட்டியில், 5ம் இடம் பிடித்தேன். இந்தாண்டு நடந்த போட்டியில், டி சைன் பிரிவில், 3 வது பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு கோலம் மீதான, ஆர்வம் குறைந்து வருகிறது. கோலத்தின் மீதான ஆர்வத்திற்கு ஊக்குமளிக்கும் வகையில் போட்டியில் பங்கேற்றேன். -அகிலாண்டேஸ்வரி அலமேலு, நெய்வேலி டவுன்ஷிப்.block_B
மேலும்
-
தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி; சீனா மெகா திட்டம்
-
ரூ.3.63 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
-
ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை
-
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
-
ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி
-
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்