கோனேரிப்பட்டி ஏரியில் தீ விபத்து
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கோனேரிப்பட்டி ஏரியில் ஏற்-பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்-புகை சூழ்ந்து பொதுமக்கள் மூச்சுவிட முடி-யாமல் அவதிப்பட்டனர்.
ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில், 40 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. தற்-போது, பெய்த தொடர் மழை காரணமாக ஏரியில் நீர் தேங்கியுள்ளது. மேலும், ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்-போல காட்சியளிக்கிறது. இந்நிலையில், ஏரியின் ஒரு பகுதியில் பொதுமக்கள் மற்றும் கோழிக்க-டைக்காரர்கள் குப்பை, இறைச்சி கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.இந்நிலையில் ஏரியின் உட்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் புகை மூட்டம் காரணமாக மூச்சுவிட முடியாமல் கடும்
சிரமத்துக்குள்ளாகினர்.
இதுகுறித்து உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்-தனர். குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ பரவியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி; சீனா மெகா திட்டம்
-
ரூ.3.63 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
-
ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை
-
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
-
ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி
-
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்