துணை முதல்வர் வருகை போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை: பாரிமுனை பகுதியில், துணை முதல்வர் உதயநிதி பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சென்ட்ரலில் இருந்து பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை, துறைமுகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், துணை முதல்வர் உதயநிதி, நேற்று மாலை பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அவர், பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெருவில் நடந்து சென்று, குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியை பார்வையிட்டார். அப்பகுதி மிகவும் குறுகலானது என்பதால், சாலைகளில் கார்கள் வரிசை கட்டி நின்றன. இதனால், அப்பகுதி முழுதும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் ஸ்தம்பித்தன.
இதனால், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள் திடீரென மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், பொதுமக்களும், ரயில் மற்றும் பேருந்து பயணியரும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும்
-
தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி; சீனா மெகா திட்டம்
-
ரூ.3.63 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
-
ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை
-
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
-
ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி
-
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்