இருசக்கர வாகனங்கள் திருட்டு செங்கை கோர்ட் பகுதியில் பீதி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட, 14 நீதிமன்றங்கள் உள்ளன.
இந்த நீதிமன்றங்களுக்கு தினமும் வழக்காடிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இவர்கள் தங்களின் வாகனங்களை, செங்கல்பட்டு - மதுராந்தகம் ஜி.எஸ்.டி., சாலை, மதுராந்தகம் - செங்கல்பட்டு சாலையின் அணுகுசாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர். பின், நீதிமன்றத்திற்குச் சென்று திரும்பி வந்து பார்க்கும் போது, வாகனங்கள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.
நீதிமன்ற வளாகம் மற்றும் ஜி.எஸ்.டி., சாலைகளில், போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் மீறி இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.
எனவே, நீதிமன்றம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி; சீனா மெகா திட்டம்
-
ரூ.3.63 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
-
ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை
-
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
-
ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி
-
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்