ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று (டிசம்பர் 29)ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 281 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் சரிந்து, ஒரு கிலோ 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (டிசம்பர் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,360 ரூபாய்ந்து சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 258 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 23 ஆயரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 58 ஆயிரத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
பண்டிகை காலங்களில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பலர் தங்கள் சிலவுகளுக்காக பங்குகளை விற்பனை செய்வது சாதாரணமானது தான் இதனாலும் விலை சற்று குறைவது வழக்கம் தான்...அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து விலை கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன..வெள்ளியை விட தங்கம் ஸ்திரமான சொத்தாக கருதலாம்...நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது என்பார்கள் அதே போல தான் அதன் விலையும்....மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்