வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை: ஸ்டாலினுக்கு சொல்கிறார் அண்ணாமலை

44

சென்னை: முதல்வர் ஸ்டாலின் பதவியிழந்து வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தி.மு.க. மகளிரணி மாநாடு நேற்று நடந்தது. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு பஸ்களில் திமுகவினர் அழைத்துவரப்பட்டனர்.

பயணிகளுக்காக இயக்கப்பட வேண்டிய அரசு பஸ்கள் இப்படி, அரசியல் கட்சி மாநாட்டுக்கு திருப்பி விடப்பட்டதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர்.


பஸ்கள் வராமல் பயணிகள் பல மணி நேரம் வேதனையுடன் காத்திருக்கும் படங்கள் தினமலர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகின. இணையத்திலும் நெட்டிசன்கள் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர். தினமலர் சமூக வலைதளத்தில், 1. பயணிகள் அவதி, 2. காத்திருந்து… காத்திருந்து, 3. வந்த இடத்தில் லாபம் பாக்கனும்ல… என்ற தலைப்பில், படத்துடன் 3 செய்திகள் கார்டாக வெளியிடப்பட்டு இருந்தது.


இதனை மேற்கோள் காட்டி, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்களை நம்பி ஓட்டளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதற்கான விலையை இன்று மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நிரந்தரமாக வீட்டிற்கு செல்ல வேண்டிய நாள் இனி வெகுதூரத்தில் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
தினமலர் சமூக வலைதள பக்கங்களில் வெளியான செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள் வாசகர்களே!

Advertisement