தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி
ஊத்தங்கரை: தேசிய உள்ளரங்கு வில்வித்தை சங்கம் மற்றும் இந்திய வெற்று வில் சங்கம் இணைந்து நடத்தும் 2-ஆம் ஆண்டு தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டி, ஊத்தங்கரையில் உள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கடந்த, 2 நாட்கள் நடந்தது.
தேசிய உள்ளரங்கு வில்வித்தை சங்கத்தலை-வரும், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறு-வனருமான திருமால் முருகன் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்-தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநி-லங்களை சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டிகள் இந்தியன் ரவுண்ட், ரீகர்வு ரவுண்ட், காம்பவுண்ட் ரவுண்ட் மற்றும் வெற்று வில் என, 4 வில் பிரிவுகளில் நடந்தது. மேலும், 10, 14, 17, 19 மற்றும் ஓபன் என, ஐந்து வயது பிரிவுகளில், போட்டிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றி-தழ்கள் மற்றும் பதக்கங்கள், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்