நாம் தமிழர் கட்சியினர் 25 பேருக்கு 'காப்பு'

ஓசூர்: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுத வேண்டும் என, நாம் தமிழர் கட்-சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நின்றி-ருந்த அரசு பஸ்களில், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்-களை ஒட்டி, நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஓசூர் டவுன் போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், 25க்கும் மேற்பட்ட, நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement