விமான நிலைய எதிர்ப்பு விவசாயிகள் கூட்டம்

ஓசூர்: ஓசூரில் ஆண்டுக்கு, 30 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, கடந்-தாண்டு ஜூன், 27ம் தேதி சட்டபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.


இதற்காக, ஓசூர், சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட, 11 கிராமங்களில் மொத்தம், 1,206 ஹெக்டேர் (2,980 ஏக்கர்) நிலங்களை கையகப்படுத்தும் பணியில், தமிழக தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) ஈடுபட்டுள்ளது.


அக்கிராமங்களில் விவசாயிகள் நிலம் வழங்க முடியாது என, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக்கூடாது எனக்கூறி, ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் நேற்று விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்-தினர். இதில், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ., பிரகாஷ் பேசும் போது, ''தமிழக முதல்வர், சட்டசபையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதற்காக மொத்தம், 5 இடங்கள் தேர்வு செய்யப்-பட்டுள்ளன. ஓசூரில் விமான நிலையம் கண்டிப்-பாக வரும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் விமான நிலையம் கொண்டு வர நட-வடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்னையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்,'' என்றார்.


எம்.பி., கோபிநாத் பேசும் போது, ''வேப்பன-ஹள்ளி தொகுதியில், 5,000 ஏக்கர் பயன்படாத நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் விமான நிலையம் அமைத்தால், விவசாயிகள், மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்-காது. அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க, மத்திய அரசிற்கு பரிந்துரை செய்-கிறோம்,'' என்றார்.

Advertisement