பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: மூலக்குறிச்சி அடுத்த காமராஜ் நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்கக்கோரி, இ.கம்யூ.,-மா.கம்யூ., கட்சி-யினர் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சபா-பதி தலைமை வகித்தார். அதில், ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை, மூலக்குறிச்சி ஊராட்சி, காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டு-களாக வீடு கட்டி குடியிருந்து வரும், 150க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த பல்வேறு சமூக பொதுமக்களுக்கு, நத்தமாக வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்க வேண்டும் என, கோஷமிட்டபடி, கலெக்டர் அலு-வலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு
ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்
Advertisement
Advertisement