குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
கூடலுார்: கூடலுார் முதல் மைல் பகுதியை சேர்ந்தவர் கதிஜா. இவர் நேற்று காலை தன் வீட்டில் உள்ள குப்பையை, அப்பகுதிக்கு வந்த நகராட்சி வாகனத்தில்கொட்டியுள்ளார். வாகனம் சென்ற சிறிது நேரத்தில், தன் கையில் போட்டிருந்த, அரை பவுன் தங்க மோதிரம் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. அது குறித்து நகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தார்.
நகராட்சி ஊழியர்கள்,ஜோதி, சுமதி ஆகியோர்குப்பை கிடங்கு சென்ற வாகனத்தில் இருந்த குப்பைகளில், ஒரு மணி நேரம் தேடி, காணாமல் ேபான மோதிரத்தை கண்டுபிடித்து நகராட்சி அதிகாரிகளிடம் ஒப் படைத்து, உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் முன்னிலையில், கூடலுார் நகராட்சி தலைவர் பரிமளா மோதிரத்தை, உரிமையாளர் கதீஜாவிடம் ஒப்படைத்தார். துாய்மை பணியாளர்களின் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு, நகராட்சி தலைவர் புத்தாடைகளை வழங்கி கவுரவித்தார். திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை