ஆட்சேபனை தெரிவித்தவர்களின் கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு
அன்னூர்: கருத்து கேட்புக் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவித்தவர்களின் கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அவிநாசியில், இருந்து கருவலூர், அன்னூர், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது.
இதற்காக சில இடங்களில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்னூர் பேரூராட்சியில் கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கி, இரு வாரங்களுக்கு முன்பு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிலர், 'நோட்டீஸில் தெரிவித்ததை விட கூடுதலாக மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் விடுபட்டுள்ளது என, பல்வேறு ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை (நில எடுப்பு பிரிவு) சர்வேயர் மற்றும் அதிகாரிகள், அன்னூரில், அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையில் கட்டடங்களை ஆய்வு செய்தனர்.
மேலும்
-
பார்சன்ஸ்வேலி நீரேற்று நிலையத்தில் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் மின் திட்டம்
-
பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
-
கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலம் கோத்தர் பழங்குடியின மக்கள் பங்கேற்று கொண்டாட்டம்
-
'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள் பனி பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க ஏற்பாடு
-
வேலை வாய்ப்பின்றி பொருளாதார நெருக்கடியில்...பல குடும்பங்கள்!: மலையில் இருந்து சமவெளிக்கு இடம் மாறும் அவலம்
-
இந்திய கலாசாரம் ஒவ்வொரு இந்தியனின் குடும்பமாகும்; கேரள கவர்னர் பேச்சு