பார்சன்ஸ்வேலி நீரேற்று நிலையத்தில் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் மின் திட்டம்
ஊட்டி: ஊட்டி நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்தில், 6.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிலத்தடி மின் இணைப்பு திட்டப்பணிகள் துவக்கப்பட்டன.
ஊட்டி பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கம் நீரேற்று நிலையம், நகராட்சி மக்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. நீரேற்று நிலையங்களுக்கு, அடர்ந்த மரங்களுக்கு இடையில் மின்சாரம் செல்வதால், பருவ மழை காலங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால், மின்வினியோகம் சரி செய்ய தாமதம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், ஊட்டி நகரம் முழுவதும் சீரான மின் வினியோகம் தொடர்ந்து வழங்க ஏதுவாக, மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, 6.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடியில் மின் இணைப்பை கொண்டு செல்ல பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஊட்டி நகராட்சி பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வாயிலாக, குடிநீர் வழங்க முடியும். இந்த பணியை நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா துவக்கி வைத்தார். இதில், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், கலெக்டர் லட்சுமி மற்றும் மேற்பார்வை பொறியாளர் சாந்த நாயகி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும்
-
விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
-
உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது; பயணிகள் 7 பேர் பலி
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை
-
ஈரான் அணுசக்தித் திட்டத்தை தொடங்கினால் அழித்துவிடுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி