'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள் பனி பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க ஏற்பாடு

கூடலுார்: கூடலுார், பந்தலுார் பகுதியில் நடப்பாண்டு எதிர்பார்த்ததை விட பருவ மழை பெய்தது. இதனால், வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தடையின்றி கிடைத்து வருகிறது. பசுந்தேயிலை மகசூல் அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பனி பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள், சிறு விவசாய தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல், பாதிப்பு ஏற்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பனி பொழிவின் தாக்கத்திலிருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, தேயிலை தோட்டங்களில் 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'பனிப்பொழிவை தொடர்ந்து, தேயிலை செடிகளில் மகசூல் பாதிப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓரளவு வசதி உள்ளவர்கள், 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தேயிலை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பாதுகாத்து வருகின்றனர். வசதி இல்லாத சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பனி பொழிவு நின்று, கோடை மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.

Advertisement