விவசாயிகள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணராயபுரம்: தமிழக விவசாயிகள் சங்கத்தின், பஞ்சப்பட்டி கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் குமார் தலைமை வகித்தார்.


இதில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பகுதி மக்கள் நலன் கருதி சட்டம் - ஒழுங்கு பாதுகாக்க புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். பஞ்சப்பட்டி கடைவீதி, நான்கு சாலை சந்திப்பில், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நலன் கருதி பொது சுகாதார வளாக கட்டடம் கட்டித்தர வேண்டும். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவிலும் டாக்டர்கள் பணிபுரிவதற்கான சூழல் உருவாக்கி, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement