விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
நமது சிறப்பு நிருபர்
சட்டசபை தேர்தலையொட்டி தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபி தொகுதிகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது. இது குறித்து ஓர் சிறப்பு அலசல்!
கொளத்தூர் தொகுதி (முதல்வர் ஸ்டாலின்)
முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதி சிறிய தொகுதியாக இருந்தாலும் அங்கு எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்குப் பின், இறந்தோர், தொகுதி மாறியோர், விடுபட்டவை என ஒரு லட்சத்து 3,812 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் ஒரே முகவரி, இரண்டு இடங்களில் ஓட்டு வைத்திருக்கும் நபர்களும் கண்டறியப்பட்டு உள்ளனர்.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி (உதயநிதி)
துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89 ஆயிரத்து 241 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டு உள்ளன.
மதுரை கிழக்கு தொகுதி (அமைச்சர் மூர்த்தி)
அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதி தமிழகத்தில் 2வது பெரிய தொகுதி. 3.70 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் உள்ளது. இங்கு, ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. எஸ்ஐஆர் பணியின் போது, 20 ஆயிரம் ஓட்டுக்கள் நீக்கப்பட்டு உள்ளன.
போடி தொகுதி (பன்னீர் செல்வம்)
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் போடி தொகுதியில், சில பாகங்களில் ஒரே வீட்டு எண்ணில் பல வாக்காளர்கள் வசிப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
உதாரணமாக, முந்தல் ஆதிதிராவிடர் காலனி, 93 பேர், கொட்டக்குடி, குரங்கணியில் 87 பேர், பூதிப்புரம், கோட்டை மேட்டுத்தெருவில் 73 பேர் ஒரே வீட்டில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 24 ஆயிரத்து 386 பேர் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். எஸ்ஐஆர் பணியில் மொத்தமாக தேனி மாவட்டத்தில், 1.25 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
காட்பாடி தொகுதி (அமைச்சர் துரைமுருகன்)
அமைச்சர் துரை முருகனின் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 35 ஆயிரத்து 666 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இறந்தோர், இரட்டை இடத்தில் ஓட்டுப்பதிவு உட்பட பல்வேறு காரணங்களால் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர்.
எடப்பாடி தொகுதி
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான இபிஎஸ்சின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 26 ஆயிரத்து 375 வாக்காளர்களின் பெயர்களானது நீக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் சேர்த்து 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
ஆலந்தூர் தொகுதி (அமைச்சர் அன்பரசன்)
அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆலந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட 3 தொகுதிகளில் ஆலந்தூரும் ஒன்று ஆகும்.
திருநெல்வேலி தொகுதி (நயினார் நாகேந்திரன்)
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி தொகுதியில் 42ஆயிரத்து 119 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 957 பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர்.
திருவெறும்பூர் தொகுதி (அமைச்சர் மகேஷ்)
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெற்றி பெற்ற திருவெறும்பூர் தொகுதியில் 39 ஆயிரத்து 983 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
திருச்சி மேற்கு தொகுதி (அமைச்சர் நேரு)
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் திருச்சி மேற்கு தொகுதியில் 57 ஆயிரத்து 339 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
அடுக்கு மாடி கட்டிடங்களில் நூற்றுக்கணக்கானோர் வசிப்பது சகஜம்தானே
இதற்க்கு அரசு ஊழியர்களின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள்தான் காரணம். இதில் பயம் சலுகைகள் , அழுத்தம், பணம் என்பவைகள் ஒரு காரணிகள் .
ஆதார் வாக்காளர் எண் இணைப்பு முரணை நீக்க கம்ப்யூட்டருக்கு உதவும். இதனை கட்டாயம் ஆக்க வேண்டும். ஓட்டு போட்டவுடன் வாக்காளர் மொபைல் க்கு தகவல். ஓட்டு போட முடியாதவர் ஆன்லைன் மூலம் நிலை தெரிவிக்க வசதி. நாடு முழுவதும் ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதனை உறுதி செய்ய சாப்ட்வேர் தயாரிக்க வேண்டும். தேர்தல் முறை சுத்தமாகி வருகிறது. ஆதார சான்று காட்டி வழக்கறிஞர் முதலில் நிர்வாகத்தை அணுகிய பின் நீதிமன்றம் நாட அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
எப்படி ஜெயிதார்கள் ன்னு புரியுது ..........
இன்னும் அரசியல் சாயம் உள்ளது, SIR பணிகள் இன்னும் தோண்ட வேண்டும் உண்மை வாக்கைலர்களுக்கு மட்டும் ஓட்டு உரிமை வழங்க வேண்டும் தேர்தல் ஆண்ணயம் அவசர பட கூடாது
இன்னும் கூட பல லட்சம் பேர் நீக்க வேண்டியது உள்ளனர். காரணம் படிவம் எழுதியது பூராவும் திமுக கட்சியினர்
இதற்கு ஆண்ட கட்சியும் ஆளும்கட்சியும் ஒருவகையில் பொறுப்பாவர்கள்.. மற்றபடி வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சிப்படி நியாயமாகவும் பொறுப்புடனும் வேலை செய்யாத அரசு ஊழியர்கள்மேல்தான் அதிகமான தவறு..
ஒரே முகவரியில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் சரிபார்க்க வேண்டியது அலுவலர்கள்தான். அவர்கள் திமுக அரசின் ஆதரவு அலுவலர்களாதலால் இந்த மோசடி பல தொகுதிகளிலும் இருக்கும்.
பழைய பென்ஷன் திட்டத்தை திமுக அரசு பிற்பாடு அறிவிப்பதற்கான முன்னேற்பாடான நன்றிக் கடனாகவும் இது இருக்கலாம்.
போலி வாக்காளர்கள் நீக்க பட்டு விட்டது சந்தோஷம் தான்! ஆனால் சென்ற தேர்தலில் அவர்கள் பெயரில் ஓட்டுக்கு துட்டு என்று கட்சிகள் கொடுத்த பணத்தை ஆட்டையை போட்டது யார் என்ற கேள்வி தான் அனைத்து கட்சிகளிலும் விரிவாக ஆராயப்படும்! இந்த முறை வேட்பாளர்களும் செலவுகள் குறைந்தன என்று நிம்மதியாக போட்டி இடலாம்! மக்கள் மட்டும் இதை நினைவில் வைத்து மனசாட்சி படி வாக்களிக்க முன் வந்தால்? தமிழ் நாட்டின் தலை எழுத்தே மாறி விடாதா?
திருட்டு திராவிடத்தில் நல்லவர் எவரும் இல்லைமேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்