ஜெர்மனி வங்கி சுவற்றை துளையிட்டு திருட்டு: கொள்ளையர்கள் துணிகரம்
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள வங்கி ஒன்றில் துளையிட்டு 35 மில்லியன் மதிப்பு பணம் மற்றும் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெர்மனியின் கெல்சென்கிர்சென் நகரில் உள்ள வங்கியில் தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு அறை சுவற்றை துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு 3 ஆயிரம் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்ததை கொள்ளையடித்துச சென்றனர். அந்த பெட்டிகளில் பணம், தங்கம் மற்றும் நகைகள் இருந்தன என தெரிவித்துள்ள போலீசார், இந்த கொள்ளைச் சம்பவத்தில் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு 30 மில்லியன் யூரோக்கள்( அமெரிக்க மதிப்பில் 35 மில்லியன் டாலர்/ இந்திய மதிப்பில் 314 கோடி ரூபாய்) இருக்கும் என தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் மிகப்பெரியது இதுதான் என போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளை குறித்து அறிந்த வாடிக்கையாளர்கள் அந்த வங்கியை முற்றுகையிட்டனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்