செஸ்: விசாக் 'வெண்கலம்'
ஹாங்காங்: ஹாங்காங் சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் விசாக், வெள்ளி வென்றார்.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் இளம்பரிதி, அபிஜீத் குப்தா, விசாக் உட்பட மொத்தம் 131 பேர் பங்கேற்றனர்.
இதன் 9வது, கடைசி சுற்றில் இந்திய வீரர்கள் விசாக், இளம்பரிதி மோதினர். இப்போட்டி 28 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் மங்கோலியாவின் அமர்டுவ்சின், பின்லாந்தின் வில்கா சிபிலாவை வீழ்த்தினார்.
முடிவில் அமர்டுவ்சின், 7.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றினார். விசாக் (7.0), சீனாவின் பெங் ஜியாங்ஜியன் (7.0) சமபுள்ளி பெற்றனர்.
இருப்பினும் 'டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஜியாங்ஜியன், வெள்ளி வென்றார். விசாக்கிற்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இளம்பரிதி (6.5) 5, அபிஜீத்குப்தா (6.0) 11வது இடம் பிடித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்
Advertisement
Advertisement