உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோ அருகே, 170 செம்மறியாடுகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. லக்னோவில் ராஷ்ட்ரீய பிரேர்னா ஸ்தல் எனப்படும் தலைவர்கள் நினைவிடம் உள்ளது.
இங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரமாண்ட சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது. நேற்று திடீரென இப்பகுதியில் 170 செம் மறியாடுகள் மர்மமாக உயிரிழந்தன. இது குறித்து மடியான் போலீஸ் ஸ்டேஷனில், 'ஆஸ்ரா ஹெல்பிங் ஹேன்ட்ஸ்' என்ற அரசுசாரா அமைப்பின் நிறுவனர் சாரு காரே புகார் அளித்தார்.
அதில், 'செம்மறியாடுகளுக்கு யாரேனும் விஷம் கொடுத்தனரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
ஆடுகளின் திடீர் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், 'ஒவ்வொரு செம்மறியாட்டுக்கும் தலா 10,000 ரூபாய் நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்' என தெரிவித்தார்.
மேலும்
-
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
-
டிக்கியில் அதிக பொருட்கள்; 15 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
-
'இ - சேவை' மையங்கள் 2 நாட்கள் மூடல்
-
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
-
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்
-
மேல்சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு