அதிக வட்டி மோசடி: மூவர் கைது
சென்னை: முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 34 பேரிடம், 40.11 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட, மூவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, தி.நகர் ஹபிபுல்லா சாலையில், தேசிய தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம் என்ற நிதி நிறுவனம், 2019 - 2021ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனத்தின் நிர்வாகிகளான சென்னையை சேர்ந்த ராஜேஷ், 44; மீரா சக்தி, 32 மற்றும் பன்னீர்செல்வம், 44 உள்ளிட்டோர் அதிக வட்டி தருவதாக, 34 பேரிடம், 40.11 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிறுவனத்தால் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால், இன்ஸ்பெக்டர் கோபி என்பவரின், 98423 74854 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்து உள்ளனர்.
மேலும்
-
குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விழா தாமரை பிரதர்ஸ் நுால் அறிமுகம்
-
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
-
ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு