யு.ஏ.இ., அனுப்பிய ஆயுத கப்பலை குண்டு வீசி அழித்தது சவுதி
துபாய்: ஏமனின் பிரிவினைவாத படைகளுக்கு ஆதரவாக அந்நாட்டின் முஹல்லா துறைமுகத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பிய ஆயுத கப்பலை சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்தது.
மேற்காசிய நாடான ஏமனில் கடந்த 10 ஆண்டு களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இப்போரில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுவினரும், அரசு படைகளும் மோதி வருகின்றன. சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் அரசு படைகளுக்கு ஆதரவாக உள்ளன.
இந்நிலையில், அரசு படைகளுக்கு உள்ளேயே, 'தெற்கு இடைக்கால கவுன்சில்' என்ற பிரிவினை வாதக்குழு உருவெடுத்தது. இவர்கள் தெற்கு ஏமனை தனி நாடாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த குழுவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவளித்து வருகிறது.
தெற்கு இடைக்கால கவுன்சில் தலைமையிலான படைகளுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை அனுப்பி வைத்தது.
அந்த கப்பல்கள் ஏமனின் முஹல்லா துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டிருந்தன.
இதையறிந்த சவுதி அரேபியா வான்வழி தாக்குதல்கள் நடத்தி, இரு ஆயுத கப்பல்களையும் அழித்தது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தாக்குதலை நடத்தியதாக சவுதி ராணுவம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, ஏமனின் அரசு படைகள் நேற்று அவசரநிலையை அறிவித்தன. எமிரேட்ஸ் உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டு வந்ததோடு, அங்குள்ள எமிரேட்ஸ் படைகளை 24 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளன.
சவுதி வெளியுறவு செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை' என்று தெரிவித்துள்ளார்.
மேலும்
-
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
-
டிக்கியில் அதிக பொருட்கள்; 15 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
-
'இ - சேவை' மையங்கள் 2 நாட்கள் மூடல்
-
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
-
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்
-
மேல்சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு