போலீஸ் விதித்த கட்டுப்பாடுகள்
கோவை: இன்று இரவு ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கோவை நட்சத்திர, மற்றும் பல்வேறு ஓட்டல் உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை போலீசார் வழங்கியுள்ளனர்.
* ஓட்டல்களுக்கு வரும் வாகனங்களை ரோட்டில் நிறுத்தக் கூடாது. நீச்சல் குளங்கள் மீது மேடை அமைக்க கூடாது. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வாகனங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை கண்காணிப்பு கேமராவால் பதிவு செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அனுமதி சீட்டு வழங்கக்கூடாது. சந்தேகத்துக்கு இடமான பொருட்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். ஆபாச நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. போதைப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* சைலன்சர் நீக்கி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிந்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
அவிநாசி ரோடு பழைய மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ஆவாரம்பாளையம் மேம்பாலம், டெக்ஸ்டூல் மேம்பாலம் தவிர பிற மேம்பாலங்கள், இரவு 9:00 மணிக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்படும்.
* ரோந்து வாகனங்களின் எண்ணை அறிய, 'ஆல் இன் ஒன்' எனும் க்யூ.ஆர்., கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீஸ் சமூக வலைதளத்தில் இது பதிவிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து அவசர உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.
* குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து, 0422 2300970, 94981 81213 மற்றும் வாட்ஸ் அப் எண், 81900 00100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மகளிர் அவசர உதவி எண், 1091 ஐயும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, இன்றிரவு 12 மணிக்கு கோவை நகர் பகுதியில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இதில், கோவை மாநகராட்சியின் முக்கிய சாலைகளான ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நடத்தப்படும் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, மாநகராட்சியில் கட்டாயம் முன்அனுமதி பெற வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்
-
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
-
டிக்கியில் அதிக பொருட்கள்; 15 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
-
'இ - சேவை' மையங்கள் 2 நாட்கள் மூடல்
-
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
-
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்
-
மேல்சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு