ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இலங்கையில் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மூவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து, 380 விசைப்படகில், டிச., 29ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.
அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டினர்.
பீதியடைந்த மீனவர்கள், அங்கிருந்து படகுடன் தப்பியபோது, தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரேசியான் என்பவரது விசைப்படகை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் நாகராஜ், 47; பிரபு, 49; ரூபன், 45, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
-
டிக்கியில் அதிக பொருட்கள்; 15 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
-
'இ - சேவை' மையங்கள் 2 நாட்கள் மூடல்
-
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
-
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்
-
மேல்சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
Advertisement
Advertisement