பெட்டியில் மூதாட்டி உடல் பேரனிடம் தீவிர விசாரணை
கடலுார்: கடலுார் மாவட்டம், வி.காட்டுப்பாளையத்தை சேர்ந்த மணி மனைவி சின்னப்பொண்ணு, 75. இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். அனைவரும் தனித்தனியே வசிக்கின்றனர். சின்னப்பொண்ணு தனியாக வசித்தார்.
சின்னப்பொண்ணுவிடம், அவரது இளைய மகன் சுப்ரமணியனின் மகன் ராஜபிரியன், 18, அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார் என கூறப்படுகிறது. இரு மாதங்கள் முன், அவரது கம்மலை வாங்கி, 10,000 ரூபாய்க்கு அடகு வைத்தார். அதை மீட்க பாட்டி பணம் கொடுத்தும், பேரன் நகையை மீட்கவில்லை.
இந்நிலையில், 27ம் தேதி முதல் சின்னபொண்ணுவை காணவில்லை. நேற்று சின்னப்பொண்ணு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மரப்பெட்டியில் மூதாட்டியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
திருப்பாதிரிபுலியூர் போலீசார், ராஜபிரியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
-
டிக்கியில் அதிக பொருட்கள்; 15 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
-
'இ - சேவை' மையங்கள் 2 நாட்கள் மூடல்
-
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
-
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்
-
மேல்சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு