'எறிச்சில்' உருவாக்கிய கோவையின் ஊர்கள்
இ ன்றைய பொள்ளாச்சி என நாம் அறியும் நகரம், இடைக்கால கல்வெட்டுகளில், 'எறிச்சில் பொழில்வாய்ச்சி' என்ற அழகிய பெயரால் அழைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பெயரே, கொங்கு நாட்டின் பண்டைய நிலவியல், குடியேற்றம் மற்றும் சமூக அமைப்புகளை ஆழமாகப் புரிந்துகொள்ள, ஒரு கதவாகத் திறக்கிறது. இந்தப் பெயரில் வரும் 'எறிச்சில்' என்ற சொல் குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்ட கல்வெட்டுகளில் சிறக்கெறிச்சில், புத்தெறிச்சில், நெருப்பெறிச்சில் போன்ற ஊர்ப்பெயர்கள் இடம் பெறுகின்றன. இவை குறிப்பாக, பல்லடம் பகுதியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
'எறிச்சில்' என்பது எறி என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது. எறி என்பதற்கு அழி, கொல், துண்டாக்கு என்ற பொருள்கள் உண்டு. இதன் அடிப்படையில், காடழித்து உருவாக்கப்பட்ட நிலம் அல்லது ஊர் என்பதே, எறிச்சில் என்ற சொல்லின் பொருளாக இருந்திருக்கலாம். இதற்கு வலுவான சான்றாக, சூலுார் அருகே உள்ள சிறக்கெறிச்சில் (இன்றைய செலக்கரிச்சல்) என்ற ஊர் விளங்குகிறது. இங்கு 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொங்கு நாட்டு வழக்கில் 'சிறை' என்பது, காட்டின் ஓரப்பகுதி என்ற பொருளில் வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக, காட்டை ஒட்டி உருவான குடியிருப்புகளே இவ்வாறான பெயர்களைப் பெற்றன என்பதை அறிய முடிகிறது.
மேலும்
-
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
-
டிக்கியில் அதிக பொருட்கள்; 15 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
-
'இ - சேவை' மையங்கள் 2 நாட்கள் மூடல்
-
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; போலீஸ் கண்காணிப்பில் பல பகுதிகள்
-
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு ஜாமின்
-
மேல்சபையில் 4 இடங்களுக்கு தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு