நெடுஞ்சாலைகளில் கிலோ மீட்டர் கற்கள் நடும்படி அமைச்சர் வேலு உத்தரவு
சென்னை : ''நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலைகளில், கிலோ மீட்டர் கற்களை, விரைவாக நட வேண்டும்,'' என, துறையின் அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ், திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன், அனைத்து தலைமைப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசியதாவது:
வடகிழக்கு பருவமழை யால், பல சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை சீரமைத்து, நல்ல முறை யில் பராமரிக்க வேண்டும்.
சாலை ஓரங்களில் உள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும். பல சாலைகளில், மழைநீர் வடிய இயலாத நிலை உள்ளது. மழைநீர் வடியும் வகை யில், அவற்றை சீரமைக்க வேண்டும் .
மாநில நெடுஞ்சலை மட்டுமின்றி, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகளில், அருகில் உள்ள ஊர் எத்தனை கிலோ மீட்டரில் உள்ளது என்பதை தெரிவிக்கும், கிலோ மீட்டர் கற்கள் இல்லை. அதுபோன்று கிலோ மீட்டர் இல்லாத இடங்களைக் கண்டறிய வேண்டும்.
அங்கு விரைவாக, கிலோ மீட்டர் கற்களை நடவேண்டும். இப்பணிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள், பணிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்