பனிப்பொழிவு அதிகரிப்பு; பந்தல் காய்கறி விலை உயர்வு
திருப்பூர்: பனிப்பொழிவால் பந்தல் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், பந்தல் அமைத்து, காய்கறி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிணற்றுப்பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசன முறையில், ஆண்டு முழுதும் இவ்வகை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடு கின்றனர். விளை நிலங்களில் பந்தல் அமைக்க, தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியமும் வழங்கப்படுகிறது.
பாகற்காய், பீர்க்கன், புடலை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, பாகற்காய், பீர்க்கன் உள்ளிட்ட சாகுபடிக்கான நாற்றுகளை நடவு செய்தனர்.
கொடி படர்ந்து, பூ விடும் தருணத்தில், பருவமழை துவங்கியது. தொடர் மழை காரணமாக, விளைநிலங்களில், தண்ணீர் தேங்கி, நோய் தாக்குதல் ஏற்பட்டது. தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகரித்ததால், பூக்கள் உதிர்ந் தது. பூ உதிர்வு மற்றும் நோய் தாக்குதலால் உற்பத்தி குறைந்திருப்பதாக,விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து, பந்தல் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்